
நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 148 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்தில் ஆறு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புபட்ட 15,700 அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆரம்பமாக நியூசிலாந்தில் மூன்று நாட்களுக்கு நாடு தழுவிய முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முடக்கத்தை வார இறுதி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓக்லேண்ட் நகரத்தில் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனாவுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 8 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, அனைவரும் குணமடைந்து வருவதாக நியூசிலாந்து தெரிவித்துள்ளது.