January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வெளிநாட்டு படைகள் வெளியேறும் திகதி நீடிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம்’: தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டு படைகள் வெளியேறும் திகதி நீடிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க தலைமையிலான கூட்டுப் படைகள் வெளியேறுவதற்குரிய காலக்கெடு இம்மாதம் 31 ஆம் திகதி ஆகும்.

தாலிபான்கள் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான டோஹா உடன்படிக்கைக்கு அமைய, அமெரிக்க படைகள் இம்மாதம் 31 ஆம் திகதி ஆப்கானில் இருந்து வெளியேற வேண்டும்.

ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் வெளிநாட்டு படைகள் ஆப்கானில் தங்குவது உடன்படிக்கையை மீறும் செயலாகும் என்று தாலிபான்களின் ஊடகப் பேச்சாளர் சுஹைல் ஷஹீன் தெரிவித்துள்ளார்.

கடவுச் சீட்டு வைத்திருக்கும் எவரும் எந்தவொரு நேரத்திலும் ஆப்கானில் இருந்து வெளியேற முடியும் என்றும் நாட்டை விட்டு வெளியேறுவோருக்கு தாலிபான்கள் தீங்கிழைக்க மாட்டார்கள் என்றும் சுஹைல் ஷஹீன் தெரிவித்துள்ளார்.