அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல வருடங்களாக சீன வங்கியொன்றில் வங்கிக் கணக்குகளை பேணிவந்தார் எனவும் அவர் சீன வங்கிக்கு செலுத்திய வரிகள் குறித்த ஆவணங்களைப் பெற்றுக்கொண்ட நிவ்யோர்க் டைம்ஸ் , அதனடிப்படையில் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
டிரம்பின் சர்வதேச ஹோட்டல் முகாமையாளர்கள் சீன வங்கியில் கணக்கை வைத்திருந்தனர் என்றும் அவர்கள் 2013 முதல் 2015 வரை வரி செலுத்தினார்கள் என்றும் நிவ்யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
சீனாவுடன் வர்த்தக உறவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து நிறுவனங்களில் டிரம்ப் முதலீடு செய்துள்ளார். இந்த நிறுவனங்கள் வர்த்தக செலவுகள் என்ற அடிப்படையில் பெருமளவு பணத்தை பெற்றுள்ளன என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த செய்தியானது ஊகங்கள் மற்றும் அனுமானங்களை அடிப்படையாக கொண்டது என டிரம்பின் நிறுவனங்களுக்கான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு வரிகளை செலுத்துவதற்காக, அமெரிக்காவில் கிளைகளைக் கொண்டுள்ள சீன வங்கியில் கணக்குகள் திறக்கப்பட்டதாகவும், ஆனால் எந்தவொரு ஒப்பந்தங்களிலோ வர்த்தக நடவடிக்கைகளிலோ ஈடுபடவில்லை என்றும் டிரம்பின் நிறுவனங்களுக்கான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.