January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தாலிபான்களுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து ஆப்கான் கிரிக்கெட் சபைக்கு புதிய தலைவர் நியமனம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக அஸீசுல்லாஹ் பஸ்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

தாலிபான்களுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஆப்கான் கிரிக்கெட் சபையின் தலைமைப் பதவியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அஸீசுல்லாஹ் பஸ்லி 2018 ஆம் ஆண்டில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக செயற்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு முன்னோடியாகத் திகழ்ந்த ஒருவரே அஸீசுல்லாஹ் பஸ்லி என ஆப்கான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஆப்கான் கிரிக்கெட் துறையின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.