January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”காபூல் விமான நிலையம் தாக்கப்படலாம்”: அமெரிக்கா எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தின் மீது ஐஎஸ் அமைப்பினால் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தமது நாட்டு பிரஜைகளை காபூல் விமான நிலையத்துக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புப் பிரிவு சனிக்கிழமை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அமெரிக்க அரசு தரப்பிலிருந்து, பயணம் மேற்கொள்ளுமாறு கூறுபவர்கள் மாத்திரம் காபூல் வந்தால் போதுமானது என்று அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஆப்கனில் சூழலை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை தொடந்து அங்கிருந்து பெருமளவானோர் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்று வருகின்றனர்.

இதனால் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே ஆயிரக் கணக்கானோர் கூடுவதால் அங்கு தொடர்ந்தும் அமைதியின்மை நிலவி வருகின்றது.

இந்நிலையில், நேற்று காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையத்திற்குள் நுழைய முயற்சித்தபோது அங்கு ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.