November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஆப்கானிஸ்தானில் இருந்து பொதுமக்களை மீட்பது இலகுவான விடயமல்ல ’: ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் இருந்து பொதுமக்களை மீட்பதில் ஆபத்துக்களை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரையில் 13 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அது வரலாற்றில் மிகக் கடினமான செயற்பாடாகும் என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி பல்வேறு விமர்சனங்களுக்கும் முகங்கொடுத்து வருகிறார்.

ஆப்கானில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு தாலிபான்களின் இடையூறு இல்லை என்று பைடன் அறிவித்துள்ள நிலையில், பைடன் அறிவிப்பு அமெரிக்க பாதுகாப்பு செயலாளரின் அறிவிப்போடு முரண்படுவதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஆப்கானில் இருந்து 50 முதல் 65 ஆயிரம் வரையிலானோரை வெளியேற்ற எதிர்பார்ப்பதாகவும், அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானில் இருந்து பொதுமக்களை மீட்பது இலகுவான விடயமல்ல என்றும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.