ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய கொன்சியூலர் அலுவலகங்கள் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மற்றும் ஹெராட் பிரதேசங்களில் இருந்த இந்தியாவின் கொன்சியூலர் அலுவலகங்களே தாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த கொன்சியூலர் அலுவலகங்களில் இருந்த ஆவணங்களையும் வாகனங்களையும் தாலிபான்கள் கொண்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
கொன்சியூலர் அலுவலகங்களுக்குள் தாலிபான்கள் நுழையும் போது, அலுவலகங்கள் மூடப்பட்டிருந்ததாக இந்தியா தெரிவித்துள்ளது.
தாலிபான்கள் வீடு வீடாகச் சென்று, சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.