ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தைப் பாதுகாக்க துருக்கி தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரஜப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
ஆப்கான் விவகாரம் தொடர்பாக உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாலிபான்களின் ஆட்சியின் கீழ் காபூல் விமான நிலையத்தை நிர்வகித்து பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள துருக்கி தயாராக இருப்பதாக எர்டோகன் தெரிவித்துள்ளார்.
தாம் விமான நிலையத்தைப் பாதுகாப்பது ஆப்கானிஸ்தானில் ஏனைய நாடுகளின் இராஜதந்திர இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தாலிபான்களுடன் பேச்சுவார்த்தைகளுக்கு துருக்கி தயாராக இருப்பதாக எர்டோகன் தெரிவித்துள்ளார்.