
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி மற்றும் அவரது குடும்பத்துக்கு ஐக்கிய அரபு இராச்சியம் புகலிடம் வழங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலைநகரை தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஜனாதிபதி குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், தாம் ஆப்கான் ஜனாதிபதி மற்றும் குடும்பத்தை மனிதாபிமான அடிப்படையில் வரவேற்றதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் போர் மற்றும் உயிர்ச் சேதம் ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே தான் நாட்டை விட்டு வெளியேறியதாக ஜனாதிபதி அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.
தான் பெரும் தொகைப் பணத்துடன் ஆப்கானை விட்டு வெளியேறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்று அவர் தெரிவித்துள்ளார்.