June 28, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கான் தேசிய கொடிக்கு பதிலாக தாலிபான் கொடியை ஏற்ற முயற்சித்ததால் பதற்றம்

ஆப்கானிஸ்தானின் ஜெலாலாபாத் நகரில் தேசிய கொடிக்கு பதிலாக தாலிபான்களின் கொடி ஏற்றப்பட்டதில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தேசிய கொடிக்குப் பதிலாக தாலிபான்களின் கொடி ஏற்றப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

தாலிபான்கள் தேசிய கொடியை மாற்ற எடுத்த முயற்சியைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாலிபான்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலரும் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆப்கானிஸ்தானின் தேசிய கொடியை ஏந்தி, வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.