January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கான் மத்திய வங்கியின் 9.5 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை முடக்கியது அமெரிக்கா

ஆப்கான்தான் மத்திய வங்கியின் 9.5 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது.

ஆப்கான் மத்திய வங்கியின் சொத்துக்கள் தாலிபான்கள் அணுகுவதைத் தடுப்பதற்காக இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஆப்கான் மத்திய வங்கியின் சொத்துக்கள் தாலிபான்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்று அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் தடை செய்யப்பட்ட பட்டியலில் பாதுகாக்கப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தாலிபான்கள் மீது தடை விதித்தால், அவர்கள் எந்தவொரு நிதியையும் அணுக முடியாத நிலை ஏற்படும் என்று நிதியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.