July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

20 ஆயிரம் ஆப்கானியர்களை வரவேற்கத் தயாராகிறது பிரிட்டன்

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து 20 ஆயிரம் ஆப்கானியர்களுக்கு புகலிடம் வழங்குவதற்கு பிரிட்டன் முன்வந்துள்ளது.

எதிர்வரும் வருடங்களில் 20 ஆயிரம் ஆப்கானியர்கள் பிரிட்டனில் குடியேறுவதற்கான புதிய திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

முதல் வருடத்தில் பெண்கள், சிறுமிகள் மற்றும் முன்னுரிமையளிக்கப்படும் 5000 பேருக்கு பிரிட்டனில் புகலிடம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“இதனை பிரிட்டனால் தனியாக செய்ய முடியாது, ஏனைய நாடுகளும் முன்வர வேண்டும்” என்று பிரிட்டனின் உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரிட்டனின் உதவித் திட்டம் போதியளவு சென்றடையவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

பிரிட்டனுக்கு மொழிபெயர்ப்பு மற்றும் ஏனைய பணிகளில் ஒத்துழைத்த ஆப்கானியர்களுக்கு மேலதிகமாக இந்த புதிய திட்டத்தின் மூலம் 20 பேர் உள்வாங்கப்படவுள்ளனர்.