அமெரிக்க விமானம் ஒன்றில் 640 க்கும் அதிகமான ஆப்கானியர்கள் தப்பிச் செல்லும் காட்சி உலகை நெகிழ வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலைநகரம் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் 640 க்கும் அதிகமான ஆப்கானியர்கள் சென்றுள்ளனர்.
நாட்டை விட்டு தப்பிச் செல்லும் பொதுமக்கள் நெருக்கமாக விமானத்தின் தரையில் அமர்ந்து பயணிக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
134 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியுமான போயிங் சி- 17 விமானத்தில் 640 பயணிகள் சென்றுள்ளனர்.
வைரலாகியுள்ள புகைப்படத்தைப் பார்க்கும் போது, ஆப்கானிஸ்தானின் கவலைக்குரிய நிலைமை வெளிப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.