January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஆப்கான் அரச ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு’: வழமைக்குத் திரும்புமாறு தாலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள தாலிபான்கள், அரச ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.

அரச ஊழியர்கள் முழு நம்பிக்கையுடன் வழமையான பணிகளுக்குத் திரும்புமாறு தாலிபான்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

“அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் முழு நம்பிக்கையுடன் உங்கள் வழமையான பணிகளுக்குத் திரும்பலாம்” என்று தாலிபான் அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது.

ஆப்கானிய அரசாங்கம் மற்றும் மேற்கு நாடுகளுக்கு பணியாற்றியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற அச்சம் நிலவிய நிலையில், தாலிபான்கள் பொது மன்னிப்பை அறிவித்துள்ளனர்.

கடுமையான தண்டனைகளை நிறைவேற்றுதல் மற்றும் போர்க் குற்றங்கள் புரிதல் போன்றவற்றுக்கு பெயர் பெற்றவர்கள் எனக் கருதப்படும் தாலிபான்கள் மன்னிப்பு வழங்கியமை ஊடகங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.