
பேஸ்புக் நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களில் தாலிபான்களை ஆதரிக்கும் விதமாக செயற்படும் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனம் தாலிபான்களை ஒரு தீவிரவாத அமைப்பாகக் கருதுவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாலிபான்களை ஆதரிக்கும் கணக்குகளை முடக்குவதற்கு ஆப்கானிஸ்தான் நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிரேம், வாட்ஸ்அப் போன்ற பேஸ்புக் நிறுவனத்தின் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாலிபான்கள் தொடர்பான உள்ளடக்கங்களை எவ்வாறு கையாள முடியும் என்பது தொடர்பாக டுவிட்டர் மற்றும் யூடியுப் நிறுவனங்களும் ஆராய்ந்து வருகின்றன.