
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தை புதன்கிழமை அவசரமாகக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்கே, பிரிட்டிஷ் பாராளுமன்றம் அவசரமாகக் கூடுகிறது.
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பான விவாதத்தை பிரிட்டன் பிரதமர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
ஏற்கனவே நடந்து முடிந்த ஒரு விடயம் தொடர்பாக விவாதிப்பதற்கு அவசரமாகப் பாராளுமன்றம் கூடுவது தொடர்பாக சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலை ஆப்கான் போரில் உயிரிழந்த பிரிட்டிஷ் படையினரின் குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ஆப்கான் விவகாரத்தில் பிரிட்டன் அரசாங்கத்தை வழிப்படுத்துவதற்கு இந்த அவசர விவாதம் உதவும் என்று சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அமெரிக்க தலைமையிலான நாடுகளின் தீர்மானத்தை, ஆப்கானில் உயிரிழந்த பிரிட்டன் மற்றும் அமெரிக்க படையினரின் குடும்பங்கள் விமர்சித்துள்ளன.