July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தாலிபான்களுடன் நட்புறவுடன் செயற்படத் தயார்’: சீனா

தாலிபான்களுடன் நட்புறவுடன் செயற்பட தாம் தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங் தெரிவித்துள்ளார்.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றியதைத் தொடர்ந்தே சீன பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தாலிபான்கள் சீனாவுடன் நட்புறவை வளர்ப்பதில் பல தடவைகளும் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆப்கானிஸ்தானின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தியில் சீனா கவனம் செலுத்துவதற்கு அதுவே காரணமாக அமைந்துள்ளது”

என்று ஹுவா சுன்யிங் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மக்களின் சுயாட்சியைத் தீர்மானிக்கும் உரிமையை தாம் மதிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

தாலிபான் தூதுக் குழுவொன்று அண்மையில் சீனாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.