ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் நாட்டை விட்டு தப்பியோட முயற்சிப்பதால் விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
விமானங்களுக்கு பொதுமக்கள் முந்தியடித்துக்கொண்டு ஓடுவதைக் கட்டுப்படுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக அமெரிக்க படையினர் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் விமானங்களில் ஏறப் போட்டி போடுவதும் விமானங்களின் படிக்கட்டுகளில் குவிந்துள்ளதுமான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
விமான நிலையம் அமெரிக்க படையினரின் பொறுப்பில் உள்ளதோடு, தூதரக ஊழியர்களை வெளியேற்றுவதற்கு அவர்கள் முன்னுரிமை வழங்கி வருகின்றனர்.
பொதுமக்களை வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறு 60 க்கு அதிகமான நாடுகள் தாலிபான்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.