January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பாப்பரசர் கவலை

File Photo

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள தாலிபான்கள் அங்கு தமது அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வத்திக்கானில் நேற்று இடம்பெற்ற வழிபாட்டின்போது, ஆப்கானிஸ்தான் குறித்து பாப்பரசர் ஆழ்ந்த கவலையை வெளியிட்டதுடன், அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதன்போது அவர், ”ஆப்கானிஸ்தான் குறித்த ஒருமித்த அக்கறை கொள்வோரின் குழுவில் நானும் இணைகிறேன். அவர்களுக்காக அமைதியின் இறைவனிடம் என்னுடன் இணைந்து பிரார்த்திக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் ஆயுதங்களின் இரைச்சல் ஓய்ந்து, பேச்சுவார்த்தை மேசையில் தீர்வுகள் கிடைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.