ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இராஜதந்திர பணியாளர்களை மீட்பதற்காக அமெரிக்க படைகள் முன்வந்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் தமது இராஜதந்திரிகளை மீட்பதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளன.
இந்நிலையில், சிக்கியுள்ள இராஜதந்திர ரீதியான பணியாளர்களை மீட்பதற்காக அமெரிக்க படைகள் மீண்டும் ஆப்கானிஸ்தான் செல்லவுள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடரந்து, தாலிபான்கள் பல்வேறு நகரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் போர் சூழ்நிலை காரணமாக 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இருப்பிடங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நிலைமை பொதுமக்களுக்கு பேரழிவு தரும் விளைவுகளுடன் கட்டுப்பாட்டை மீறி வருவதாக ஐநா தலைவர் கவலை வெளியிட்டுள்ளார்.