ஆப்கானிஸ்தானின் 2வது பெரிய நகரான காந்தகாரை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், அங்குள்ள பிரதான நகரங்களை தாலிபான்கள் கைப்பற்றி வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக, ஆப்கான் படையினருக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள தாலிபான்கள், அங்குள் நகரங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் இரண்டு மாகாணங்களின் தலைநகரை தலிபான்கள் கைப்பற்றியிருந்ததுடன், ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான காந்தகாரையும் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை தலைநகர் காபுல் போன்ற முக்கிய நகரங்களையும் தாலிபான்கள் நெருங்கியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.