January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலியாவில் மீண்டும் கொரோனா பரவல்; தலைநகரம் கென்பரா ஒரு வாரத்துக்கு முடக்கம்!

அவுஸ்திரேலியாவின் தலைநகரமான கென்பராவை ஒரு வார காலத்துக்கு முடக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கென்பராவில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இன்று முதல் ஒரு வாரத்துக்கு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்துக்கு மேற்பட்ட காலத்தில் அவுஸ்திரேலியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நபருக்கு எங்கிருந்து வைரஸ் தொற்றியது என்பது தெளிவில்லாத காரணத்தினால், முழு நகரும் முடக்கப்பட்டுள்ளது.

நான்கு இலட்சம் பேர் வசிக்கும் கென்பராவில் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.