ஆப்கானிஸ்தான் தலைவர்கள் ஒன்றிணைந்து தாலிபான்களுக்கு எதிராகப் போராட வேண்டும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்க தலைமையிலான கூட்டுப் படைகள் 20 வருட இராணுவ நடவடிக்கைகளின் பின்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து சர்வதேச படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
படைகளை நீக்கிக்கொள்வதற்கு தாம் எடுத்த தீர்மானம் தொடர்பாக வருத்தப்படவில்லை என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் 34 மாநிலங்களில் 8 மாநிலங்களை தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், தாலிபான்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரியவருகிறது.