மனித செயற்பாடுகள் முன்னெப்போதும் இல்லாத, மீள முடியாத பருவநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஐநா ஆய்வு அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.
உலகில் வெப்ப அலைகள், வறட்சி, வெள்ளம் மற்றும் கடந்த ஒரு தசாப்த காலத்தில் முன்னெப்போதும் இல்லாத வெப்பநிலை அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக ஐநா ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள் ‘மனித குலத்துக்கான சிவப்பு எச்சரிக்கை’ ஆகும் என்று ஐநா தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகள் வேகமாக செயற்பட்டால், ஒரு பேரழிவைத் தடுக்க முடியும் என்று ஐநா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பச்சை வீட்டு வாயு பயன்பாடு உலக வெப்பநிலையைத் தணிக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
அரசாங்கங்களும் உலகத் தலைவர்களும் விரைவாக செயற்பட்டால், பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை சமாளிக்க முடியும் என்று ஐநா தலைவர் என்டோனியோ குட்டேர்ரஸ் தெரிவித்துள்ளார்.