(File photo)
சீனாவில், புதிய வைரஸ் தொற்று பரவல் அதிகரித்ததையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய வுகானில் வசிக்கும் 12 மில்லியன் மக்களுக்கு ஆறு நாட்களுக்குள் கொவிட் சோதனையை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இறுதியாக வெளியான தரவுகளின் படி, வுகானில் 11.3 மில்லியன் மக்கள் கொவிட் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை வரை இந்த சோதனைகளில் 78 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவற்றில் 41 பேர் அறிகுறியற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைகளுக்காக 28000 க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் சுமார் 2,800 முகாம்களில் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
வுஹான், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் 6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் விடுமுறையில் ஊரை விட்டு வெளியேறியவர்கள் தவிர, அனைவரும் கொவிட் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் வுஹானில் உள்ள தொழிற்துறை பகுதியில் ஏழு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கொவிட் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அங்கு புதிய கொவிட் கொத்தணி உருவாக்கப்பட்டது.