January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாட்டு யாத்திரிகர்களுக்காக எல்லைகளைத் திறக்கத் தயாராகும் சவூதி அரேபியா

கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட வெளிநாட்டு யாத்திரிகர்களுக்காக சவூதி அரேபியா, அதன் எல்லைகளைத் திறக்கத் தயாராகி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் அபாயத்தைத் தொடர்ந்து சவூதி அரேபியா 18 மாதங்களாக வெளிநாட்டு யாத்திரிகர்களை அனுமதிப்பதை இடைநிறுத்தி இருந்தது.

முஸ்லிம்களின் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவுக்கான உம்றா கடமைகளுக்கு தடுப்பூசி பெற்றுக்கொண்ட வெளிநாட்டு யாத்திரிகர்களை அனுமதிக்க சவூதி தீர்மானித்துள்ளது.

சவூதி அரேபியா ஹஜ் யாத்திரையால் வருடாந்த 12 பில்லியன் அமெரிக்க டொலர் வரையான வருமானத்தைப் பெறுகிறது.

இம்முறை ஹஜ் கடமைகளை மேற்கொள்ள உள்நாட்டில் இருந்து 60 ஆயிரம் யாத்திரிகர்களுக்கு மாத்திரம் சவூதி அனுமதி வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.