November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

9/11 நினைவு நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாமென பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் பைடனிடம் வேண்டுகோள்

செப்டம்பர் 11 நினைவு நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாமென குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தாக்குதல் தொடர்பான ஆவணங்களை வகைப்படுத்தாவிட்டால் குறித்த தாக்குதல் நினைவு நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு அவர்கள் பைடனைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சவூதி அரேபிய அதிகாரிகள் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆவணங்களை வெளியிடுமாறு 1800 க்கும் மேற்பட்ட உறவினர்கள் கையொப்பமிட்டு பைடனுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி குறித்த ஆவணங்களை வெளியிட மறுத்தால், செப்டம்பர் 11 தாக்குதலின் 20 ஆவது நினைவு நிகழ்வுகளிலும் பங்கேற்கக் கூடாது என்று பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

2001 ஆம் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி அல்கைதா பயங்கரவாத அமைப்பு மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 3000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் சவூதி அரேபிய அதிகாரிகள் முன்னதாகவே அறிந்திருந்ததாகவும், தாக்குதலைத் தடுப்பதற்கு அவர்கள் எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குறித்த ஆவணங்களை வெளியிடுவதாக ஜோ பைடன் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.