July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா தடுப்பூசியால் பாலூட்டும் தாய்மாருக்கு பாதிப்புகள் இல்லை’: உலக சுகாதார ஸ்தாபன நிபுணர்

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக வழங்கப்படும் தடுப்பூசியால் பாலூட்டும் தாய்மார்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி பாலூட்டும் தாய் மற்றும் குழந்தையின் நோயெதிர்ப்பு கட்டமைப்பை பலப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தையை புதிதாக பிரசவித்த மற்றும் பாலூட்டும் தாய்மார் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம் என்று பிரதம விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தற்போது பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளில் உயிர்வாழும் வைரஸ்கள் இல்லை என்றும் அவை தாய்ப் பால் மூலம் கடத்தப்படும் அபாயம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.