July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுவர் துஷ்பிரயோக படங்களை கட்டுப்படுத்த ஆப்பிளில் புதிய தொழில்நுட்பம்!

ஆப்பிள் சாதனங்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய புகைப்படங்களை கண்டுபிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம் தொடர்பான விவரங்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில் ஆப்பிள் சாதனங்களுக்கான இந்த சிறப்பு அம்சம் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம் (NCMEC) மற்றும் பிற குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளால் தொகுக்கப்பட்ட சிறுவர்களின் பாலியல் துஷ்பிரயோக படங்களின் தரவுத்தளத்துடன் படங்களை ஒப்பிட்டு இந்த தொழில்நுட்பம் செயற்பட உள்ளது.

இந்த தொழில்நுட்பம் மூலம், ஆப்பிள் சாதனங்களில், சேமிப்பு தளமான “iCloud” ல் ஒரு படம் சேமிக்கப்படுவதற்கு முன்பு, அந்த படங்கள் சிறுவர் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடையதா என ஆராயும்.

அவ்வாறான புகைப்படங்கள் கண்டுப்பிடிப்படும் பயனாளரின் கணக்கை முடக்க அல்லது சட்டநடவடிக்கைகளை எடுப்பதற்கான பரிந்துரைகளை ஆப்பிள் நிறுவனம் முன்வைக்கும் என தெரிவித்துள்ளது.

எனினும் இந்த தொழில்நுட்பம் பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் அரசியல் கலந்துரையாடல்களை கண்காணிக்க விரிவுபடுத்தப்படலாம் என்ற கவலைகள் எழுந்துள்ளன.

இந்த தொழில்நுட்பத்தை சர்வாதிகார அரசாங்கங்கள் அதன் குடிமக்களை உளவு பார்க்க பயன்படுத்தலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.