மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்கலை செப்டம்பர் வரை இடைநிறுத்துமாறு உலக நாடுகளிடம், உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலகின் அனைத்து நாடுகளும் அவற்றின் சனத் தொகையில் 10 வீதத்திற்கேனும் தடுப்பூசி ஏற்றி முடிக்கும் வரை மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்கலை இடைநிறுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
செல்வந்த நாடுகள் அவற்றின் பொதுமக்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
செல்வந்த நாடுகள் மேலதிகமாக உள்ள தடுப்பூசிகளை வளர்ந்து வரும் நாடுகளுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
முழுமையான சனத் தொகைக்கு தடுப்பூசி வழங்கியுள்ள நாடுகள், தடுப்பூசிகளை விரயம் செய்வதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.