இங்கிலாந்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி 2021 புத்தாண்டு தொடக்கத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து அரசாங்கத்தின் ஆலோசகர்களில் ஒருவரான ஜொனாதன் வான்-டாம் தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி மற்றும் அஸ்ட்ராஜெனெகாவால் தயாரிக்கப்படும் தடுப்பூசி கிறிஸ்மஸுக்குப் பிறகு விரைவில் தயாரிக்கப்படலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜொனாதன் வான்-டாம் கூறியுள்ளார்.
ஜொனாதன் வான்-டாம் மேலும் கூறியதாவது,
அனைத்து தடுப்பூசிகளும் மூன்று கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.மேலும் அவை நோயாளிகளுக்கு வழங்கப்படுவதற்கு முன்னர் கட்டுப்பாட்டாளரால் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்காக மதிப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.