January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிறுவனங்களை விமர்சித்த குற்றச்சாட்டில் சீனாவின் முதற்தர தொழில் அதிபருக்கு 18 வருட சிறைத்தண்டனை

photo: www.sundawu.net

பெருநிறுவன முதலாளிகளை வெளிப்படையாக விமர்சித்த குற்றச்சாட்டில் சீனாவின் முதற்தர தொழில் அதிபருக்கு 18 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹெபெய் மாநிலத்தைச் சேர்ந்த சுன் டாவுவுக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுன் டாவு, சீனாவில் மிகப் பெரிய விவசாய தொழிற்துறை உரிமையாளர் ஆவார்.

67 வயதுடைய சுன், மனித உரிமைகள் மற்றும் அரசியல் ரீதியான தலைப்புகளில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

சண்டைகளையும் பிரச்சினைகளையும் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் சுன் டாவுவுக்கு இவ்வாறு நீண்ட கால தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக விவசாய நிலத்தை ஆக்கிரமித்தல், அரச நிறுவனங்களைத் தாக்க கூட்டம் கூட்டல், அரச அதிகாரிகளின் பணிகளுக்கு தொந்தரவாக இருத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களும் சுன் டாவு மீது முன்வைக்கப்பட்டுள்ளது.