November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஆப்கானிஸ்தான் மீதான சீனாவின் ஈடுபாடு நேர்மறையாக அமையலாம்’: அமெரிக்க இராஜாங்க செயலாளர் 

ஆப்கானிஸ்தான் மீதான சீனாவின் ஈடுபாடு நேர்மறையான விடயமாக அமையலாம் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

தாலிபான் பிரதிநிதிகள் சீனாவுக்கு விஜயம் செய்தது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மோதலுக்கு சீனா அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய தீர்வை வழங்க எதிர்பார்ப்பதாயின், நேர்மறையாக அமையலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானை மீளக் கட்டியெழுப்புவதிலும் சமாதான செயற்பாட்டிலும் தாலிபான்கள் முக்கிய பங்கு வகிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை இராணுவ ரீதியாக ஆக்கிரமிப்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று என்டனி பிளிங்கன் இந்தியாவில் தெரிவித்துள்ளார்.

தாலிபான்கள் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தாலிபான் அமைப்பின் ஒன்பது உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைகளுக்காக சீனாவுக்கு சென்றுள்ளனர்.