July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியா உள்ளிட்ட கொரோனா சிவப்பு எச்சரிக்கையுள்ள நாடுகளுக்கு செல்லும் பிரஜைகளுக்கு சவூதி பயணத் தடை

கொரோனா தொற்றின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு பயணிக்கும் சவூதி அரேபிய பிரஜைகளுக்கு 3 வருட பயணத் தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இவ்வாறு பயணத் தடை விதிக்கப்படும் என்று சவூதி எச்சரித்துள்ளது.

அண்மையில் கொரோனா பரவல் சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ள நாடுகளுக்கு சவூதி அரேபிய பிரஜைகள் பயணிக்கக் கூடாது என்று உள்துறை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

சவூதி அரேபியாவின் கொரோனா சிவப்பு எச்சரிக்கைப் பட்டியலில் இந்தியா, துருக்கி, ஈரான், டுபாய், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, லெபனான், யெமன், ஆர்மேனியா, எத்தியோப்பியா, சோமாலியா, கெங்கோ, வெனிசுவேலா, பெலரஸ், வியட்நாம் ஆகிய நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

சவூதி அரேபியாவின் பயண வழிகாட்டல்களை மீறி மேற்படி நாடுகளுக்கு பயணிக்கும் பிரஜைகளுக்கு பெரும் தொகை தண்டப்பணமும் 3 வருடங்கள் வரையான பயணத் தடையும் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.