July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அணு ஏவுகணைகளை சேமிக்கும் திறனை விரிவுபடுத்துகிறது சீனா; அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்!

(Photo : Twitter/Hans Kristensen)

அணு ஏவுகணைகளை சேமித்து வைக்கும் திறனை சீனா விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் (FAS) அறிக்கை வெளியிட்டுள்ளது.

செய்மதி படங்களை ஆதாரமாக முன்வைத்துள்ள அமெரிக்க விஞ்ஞானிகள் சீனாவின் மேற்கில் உள்ள சின்ஜியாங் மாகாணத்திலிருந்து அணு ஏவுகணை சிலோ களத்தை சீனா உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களில், சீனா தனது இரண்டாவது புதிய சிலோ புலத்தை உருவாக்கி வருவதாக அறிக்கை தெரிவிக்கின்றது.

இரண்டாவது ஏவுகணை சிலோ புலம் யூமன் புலத்திலிருந்து வடமேற்கே 380 கிலோமீட்டர் (240 மைல்) தொலைவில் கிழக்கு சிஞ்சியாங்கில் உள்ள ஹாமி என்ற மாநில அளவிலான நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

இந்த தளத்தில் ஏவுகணைகளை சேமித்து வைக்கும் நிலத்தடி வசதிகளுடன் சுமார் 110 குழிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், கன்சு மாகாணத்தில் யூமனில் ஒரு பாலைவன பகுதியில் ஒரே இடத்தில் 120 குழிகள் காணப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் அறிவித்திருந்தது.

யூமன் தளத்தை போலவே, ஹமி தளமும் சுமார் 800 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது.

இதனிடையே சீனாவின் அணுசக்தி உருவாக்கம் குறித்து அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.