பிரான்சின் முதல் பெண்மணி பிரிஜிட் மக்ரோன் தன்னை ஒரு வார காலத்திற்கு தனிமைப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.அவரின் அலுவலகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த 15 ம் திகதி முதல்பெண்மணி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பிலிருக்க வேண்டிய நிலையேற்பட்டது. அதனை தொடர்ந்து அந்த நபர் இன்று சிறிதளவு நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளார் என அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப முதல் பெண்மணி ஏழு நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்துகின்றார். ஆனால் அவர் இதுவரை நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.