January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்ததால் ஆப்கானிஸ்தானில் ஊரடங்கு உத்தரவு

ஆப்கானிஸ்தானில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் வன்முறைகள் அதிகரித்து வருவதன் காரணமாக இவ்வாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாலிபான்கள் நகரங்களுக்குள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கு இவ்வாறான முன்னேற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

தலைநகரம் காபூல் உட்பட இரண்டு மாகாணங்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி முதல் மக்கள் நடமாட்டங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து சர்வதேச படைகள் விலகிக்கொண்டதைத் தொடர்ந்து, தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பின் அரைவாசி பகுதியை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக தெரியவருகிறது.