
சீனாவின் மத்திய பகுதியில் கடும் வெள்ள நிலைமையால் 12 பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளனர்.
ஹெனான் மாநிலத்தில் பல்லாயிரக் கணக்கானோர் வெள்ள அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் சுரங்கப் பாதையில் பயணித்த ரயிலொன்று வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த ரயிலுக்குள் பயணிகளின் கழுத்து வரையில் வெள்ள நீர் காணப்படுவதாகவும், அதிலுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சீன ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை ஹெனான் மாநிலத்தில் 94 மில்லியன் மக்கள் வசிக்கும் நிலையில் அந்த மக்களுக்கு சீரற்ற காலநிலை தொடர்பில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.