July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய புகைப்பட பத்திரிகையாளர் ஆப்கானிஸ்தான்-தலிபான் மோதலில் பலி!

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட பத்திரிகையாளரான புலிட்சர் பரிசு வென்ற தனிஷ்  சித்திக் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தலைமை புகைப்படக் கலைஞரான தனிஷ்  சித்திக் இறக்கும் போது ஆப்கானிஸ்தானில் பணியில் இருந்தார்.

ஆப்கான்படையினருக்கும் தலிபான் போராளிகளுக்கும் இடையே கந்தகாரில் நடந்த தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கான் படையினருடன் களத்தில் இருந்துள்ள சித்திக், தலிபான்களின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த சித்திக், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.

மியான்மரின் சிறுபான்மை ரோஹிங்கியா சமூகம் எதிர்கொள்ளும் வன்முறைகளை வெளிப்படுத்தும் ஆவணப்படுத்தலுக்காக 2018 ஆம் ஆண்டில்,  புலிட்சர் பரிசை சித்திக் வென்றுள்ளார்.

இந்தியாவின் பேரழிவை ஏற்படுத்திய 2வது அலையின் போது இவர் எடுத்த புகைப்படங்கள் அவருக்கு உலகளாவிய பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தன.

இவரின் உயிரிழப்பிற்கு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.