உலகம் கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான தளர்வுகளால் பெரும்பாலான மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இருக்கின்றனர். இக்காரணங்களால் கொரோனா உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கையும் கொரோனாவால் இறப்பவர்கள் எண்ணிக்கையும் உலகளவில் மீண்டுமொரு முறை அதிகரிக்கிறது.
அனைத்து நாடுகளும் செப்டம்பர் இறுதிக்குள் தங்கள் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 10% பேருக்காவது செப்டம்பர் இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
2021 முடிவதற்குள் குறைந்தபட்சம் 40% பேருக்கும், 2022 ம் ஆண்டு பாதிக்குள் 70% பேருக்கும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
அப்படி செய்தால் மட்டுமே கொரோனாவின் தாக்கத்தை ஓரளவாவது சமாளிக்க இயலும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.