January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னாபிரிக்காவில் தொடரும் வன்முறைகளில் 72 பேர் பலி

தென்னாபிரிக்காவின் சில பகுதிகளில் தொடரும் வன்முறைகளால் 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜெகொப் ஸ_மா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வன்முறைகள் இடம்பெற்று வருகிறது.

வன்முறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் வர்த்தக நிலையங்களைத் தீ வைக்கவும் கொள்ளையடிக்கவும் ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும், வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா பரவலைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட வறுமை மற்றும் தொழில்வாய்ப்பின்மையும் இந்த வன்முறைகளுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

வன்முறைகளில் ஈடுபட்ட 1234 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.