July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி கொலை செய்யப்பட்ட பின்னர் வெளிநாட்டு படை உதவியைக் கோருகிறது ஹைட்டி

ஹைட்டி ஜனாதிபதி ஜோவனல் மோய்ஸ் கொலை செய்யப்பட்ட பின்னர் வெளிநாட்டு படைகளின் உதவியை ஹைட்டி அரசாங்கம் கோரியுள்ளது.

ஜனாதிபதி கொலை செய்யப்பட்ட பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைக் கட்டுப்படுத்தவே, ஹைட்டி வெளிநாட்டு படை உதவிகளைக் கேட்டுள்ளது.

ஹைட்டி அரசாங்கம் ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றில் இருந்து படை உதவி கோரியுள்ளது.

ஹைட்டிக்கு படை உதவிகளை வழங்கும் எந்தவொரு திட்டமும் தற்போது இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி 28 பேர் அடங்கிய வெளிநாட்டு கூலிப் படையால் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹைட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், வெளிநாட்டு கூலிப் படையுடனான துப்பாக்கி சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 17 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, ஹைட்டி அரசாங்கம் வெளிநாட்டு படை உதவி கோரியுள்ளது.