February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உள்நாட்டு தயாரிப்பான ‘அப்டலா’ தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதித்தது கியுபா

உள்நாட்டு தயாரிப்பான ‘அப்டலா’ தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு கியுபா அனுமதி வழங்கியுள்ளது.

அப்டலா தடுப்பூசிக்கு கியுபாவின் மருத்துவ கட்டுப்படுத்தல் சிக்மெட் ஆணையகம் அனுமதி வழங்கியுள்ளது.

தடுப்பூசி பரிசோதனைகளில் 92 வீத வினைத்திறன்மிக்க தன்மையைக் காட்டிய பின்னரே, உள்நாட்டு பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

லத்தின் அமெரிக்க நாடுகளில் தாமாகவே தயாரித்த தடுப்பூசி ஒன்று பயன்பாட்டு வருவது இதுவே முதல் தடவையாகும்.

கியுபா ஐந்து தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து, பரிசோதனைகளை நடத்தி வருகிறது.

அப்டலா மற்றும் சொபெரனா 2 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கப்பட முன்னரும், மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.