நியூசிலாந்தில் நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட வனுஷி வோல்டர் என்ற பெண் வெற்றியீட்டியுள்ளார்.
தொழிற்கட்சியின் சார்பில் ஓக்லாண்டின் அப்பர் ஹார்பர் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட வனுஷி, 14,142 வாக்குகளைப் பெற்று கொண்டுள்ளார்.
இவரை எதிர்த்து தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டிருந்த ஜேக் பெஸானட் 12,727 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.
தன்னுடைய வெற்றி குறித்து வனுஷி வோல்டர் அவருடைய டுவிட்டர் பதிவில், ‘என்ன ஒரு அருமையான தேர்தல். இந்த வெற்றி மூலம் பாராளுமன்ற உறுப்பினராக என்னுடைய மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு பெரிய பாக்கியம் கிடைத்திருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.