May 23, 2025 11:57:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு டோக்கியோவில் அவசர நிலை பிரகடனம்

ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு ஜப்பானின் தலைநகரான டோக்கியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

டோக்கியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் 22 ஆம் வரை அவசர நிலை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் இம்மாதம் 23 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கு பார்வையாளர்களை அனுமதிக்காமல் இருப்பது தொடர்பாகவும் ஜப்பான் சுகாதாரத்துறை கவனம் செலுத்தியுள்ளது.