January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹைட்டி ஜனாதிபதி ஜோவனல் மோய்ஸ் துப்பாக்கி பிரயோகத்தில் மரணம்

ஹைட்டி குடியரசின் ஜனாதிபதி ஜோவனல் மோய்ஸ் துப்பாக்கி பிரயோகத்தில் மரணம் அடைந்துள்ளார்.

ஜனாதிபதி ஜோவனல் மோய்ஸ் அவரது தனிப்பட்ட வீட்டில் இருக்கும் போது, அடையாளம் தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு முதல் பதவியில் உள்ள அவர் 53 வயதில் கொல்லப்பட்டுள்ளார்.

அடையாளம் தெரியாதோரின் தாக்குதலில் ஹைட்டி ஜனாதிபதியின் மனைவியும் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது “மனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்” என்று ஹைட்டியின் இடைக்கால பிரதமர் க்லோட் ஜோசப் கண்டித்துள்ளார்.

ஹைட்டியில் அரசியல் ரீதியான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையிலேயே, ஜனாதிபதி ஜோவனல் மோய்ஸும் கொல்லப்பட்டுள்ளார்.