ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் சர்வதேச விநியோகம் தடைப்படலாம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டை மீறியுள்ள காரணத்தினால், தடுப்பூசியை சர்வதேச நாடுகளுக்கு விநியோப்பதில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
முதலில் உள்நாட்டு தடுப்பூசி தேவையைப் பூரணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ரஷ்ய சுகாதாரத்துறை, ஸ்புட்னிக் தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளது.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்குமாறு, ரஷ்ய அரசாங்கம் குறித்த நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.
ரஷ்யாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள காரணத்தினால் சர்வதேச நாடுகளுக்கான தடுப்பூசி விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.