May 25, 2025 0:27:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒக்ஸ்போர்டின் தடுப்பூசி விவகாரம்;பிரித்தானியாவைச் சீண்டும் ரஷ்யா

‘ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்தினால் குரங்காக மாறிவிடுவீர்கள்‘ என ரஷ்யா தெரிவித்துள்ள போலியான பிரசாரத்திற்கு பிரித்தானியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக ‘ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரிக்கும் கோவிஷீல்ட் மருந்தை பயன்படுத்தினால் குரங்காக மாறிவிடுவீர்கள் என்றும் பிரித்தானிய பிரதமர் ஒக்ஸ்போர்ட் மருந்து பயன்படுத்தியதால் அவருக்கு குரங்கு முகம் வந்து விட்டது’ எனவும் கிராபிக்ஸ் புகைப்படங்களை ரஷ்ய தொலைக்காட்சிகள் வெளியிட்டு வருகின்றன.

பிரிட்டிஸ் பிரதமரை கேலி செய்யும் விதத்திலும் ரஸ்ய தொலைக்காட்சிகளில் படங்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா மற்றும் பிரேசிலை இலக்குவைத்தே ரஸ்யா இந்த பிரசாரத்தை முன்னெடுத்துள்ளதாகவும் இந்த நாடுகளில் ரஸ்யா தனது கொரோனா வைரஸ் மருந்துகளை விற்பனை செய்ய முயற்சிக்கின்றது எனவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த பிரசாரம் கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய விடயம் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான மருந்தினை உருவாக்க முயலும் நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்த முயலும் பாரதூரமான விடயம் இது எனவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் தனது விஞ்ஞானத்திற்கும் தரத்திற்கும் பெயர்பெற்றது என்பது குறித்து எந்த சந்தேகமும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

நாங்கள் சர்வதேச தராதரத்தை பேணுகின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர், ரஸ்யா போலியான தகவல்களை தனது வெளிவிவகார கருவியாக தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவது அறியப்பட்ட விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.