July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தோனேசியாவில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு; 63 நோயாளிகள் பலி!

(Photo : Twitter : Ministry of Health  of Indonesia)

இந்தோனேசியாவின் பல நகரங்களில் உள்ள வைத்தியசாலைகள் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒக்ஸிஜன் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒக்ஸிஜன் பற்றாக்குறையால் இதுவரை இந்தோனேசியாவின் வைத்தியசாலைகளில் 63 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக  தெரிய வருகின்றது.

இதனை சமாளிக்கும் வகையில் மருத்துவ ஒக்ஸிஜன் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கும் படி இந்தோனேசிய அரசாங்கம் தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவை போன்று இந்தோனேசியாவிலும் டெல்டா வைரஸின் தீவிரம் காரணமாக பல நெருக்கடிகளை நாடு எதிர்கொண்டுள்ளது.

இந்தோனேசியா ஒவ்வொரு நாளும் 25,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தோனேசியா மிக மோசமான கொவிட் தொற்று பாதிப்பை எதிர் கொண்டுள்ளது.

அங்கு இதுவரை சுமார் 2.3 மில்லியன் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 60,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

எனினும், தலைநகர் ஜகார்த்தாவிற்கு வெளியே கடுமையாக போதிய கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் ஒட்டு மொத்த தொற்று எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.