January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கனடாவில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக 500 பேர் பலி

கனடாவின் மேற்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை வரை அங்கு 500 க்கும் அதிகமான திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பதிவாகியுள்ள இந்த “திடீர் மற்றும் எதிர்பாராத மரணங்களுக்கு” வெப்பநிலை உயர்வு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் முதல் ஏற்பட்டுள்ள “வெப்ப குவிமாடம்” காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெப்பநிலை வரலாறு காணாத உயர்வை எட்டியது.

இந்நிலையில் அங்கு 170 க்கும் மேற்பட்ட இடங்களில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காட்டுத் தீயினால் ஏற்பட்டுள்ள வெப்ப அலைகளிலிருந்து அந்த பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்றும் பணியை கனேடிய இராணுவம் துரிதப்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, தீ பரவலினால் அழிக்கப்பட்ட லிட்டன் கிராமத்தில் குறைந்தது இரண்டு பேர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் ஒரு செய்தியாளர் சந்திப்பில், சுமார் 350 ராணுவ வீரர்கள் மற்றும் விமானங்கள் இயற்கை அனர்த்தத்தில் சிக்கியுள்ள சமூகங்களுக்கு உதவ தயாராக உள்ளதாக தெரிவித்தார்.